எழுத்தின் அளவு: அ+ அ- அ
கரூரில் நடைபெற்ற தவெக கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி மூச்சு திணறல் ஏற்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களை அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.
கரூர் வேலுசாமிபுரத்தில் நடைபெற்ற தவெக பிரசாரத்தில் ஏற்பட்ட கூட்டநெரிசலில் சிக்கி 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மூச்சுதிணறல் ஏற்பட்டு பாதிக்கப்பட்ட 80க்கும் மேற்பட்டோர் அங்குள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த துயர சம்பவம் அறிந்து மிகுந்த வேதனை அடைந்த அஇஅதிமுக பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா, பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவிப்பதற்காக கரூர் வருகை தந்தார். தொடர்ந்து அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து நலம் விசாரித்த புரட்சித்தாய் சின்னம்மா, காயமடைந்தவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.