அடுத்தடுத்த நாட்களில் இரண்டு திருமணம் செய்த நபர் கைது!

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

அடுத்தடுத்த நாட்களில் இரண்டு திருமணம் செய்துகொண்ட இளைஞரை போலீசார் கைது செய்தனர். இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கமான திருவள்ளூர் மாவட்டம் திருநின்றவூரை சேர்ந்த 21 வயது பெண்ணை, சென்னை கேளம்பாக்கம் பகுதியை சேர்ந்த பிரின்ஸ் ஆர்ம்ஸ்ட்ராங் என்ற இளைஞர் கடந்த 2022 ஆம் ஆண்டு காதல் திருமணம் செய்து கொண்டார். இளம்பெண்ணிடம் நகை, பணம் கேட்டு அவர் துன்புறுத்தியதாக கூறப்படும் நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன் அவர் அந்த பெண்ணிடம் தொடர்பை துண்டித்துக்கொண்டதாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து,  இளம்பெண் பிரின்ஸ் ஆர்ம்ஸ்ட்ராங்கின் வீட்டிற்கு சென்ற போது, அவர் தன்னை திருமணம் செய்து கொண்ட அடுத்த நாளே மற்றொரு பெண்ணை திருமணம் செய்து கொண்டது தெரியவந்தது. இதுகுறித்து அவர் அளித்த புகாரையடுத்து பட்டாபிராம் அனைத்து மகளிர் போலீசார் பிரின்ஸ் ஆர்ம்ஸ்ட்ராங்கை கைது செய்தனர்.

Night
Day