அஇஅதிமுக பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மாவுடன் கழக நிர்வாகிகள் சந்திப்பு

எழுத்தின் அளவு: அ+ அ-

அஇஅதிமுக பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மாவை, கழக நிர்வாகிகள் சந்தித்து, தங்கள் இல்லத் திருமண நிகழ்ச்சிக்‍கான அழைப்பிதழை வழங்கி வாழ்த்து பெற்றனர். 

பூந்தமல்லி முன்னாள் நகரக்‍ கழக செயலாளர் பூவைகந்தன், தனது மகள் மதுமிதாவின் திருமண அழைப்பிதழை, குடும்பத்தினருடன், அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மாவிடம் வழங்கி வாழ்த்து பெற்றார்.

திருத்தணி பொறுப்பாளர், கழக நிர்வாகி டி.என். தனபால், தன் மகள் பரமேஸ்வரியின் திருமண அழைப்பிதழை, அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மாவிடம் வழங்கி வாழ்த்து பெற்றார்.

சென்னையைச் சேர்ந்த, புரட்சித்தலைவி அம்மா மற்றும் புரட்சித்தாய் சின்னம்மாவின் விசுவாசி எம்.ஜீவராஜ் ஜெயின், தனது மகள் டாக்டர் வர்ஷா, டாக்டர் பிரகாஷ் ஆகியோரின் திருமண அழைப்பிதழை குடும்பத்தினருடன் அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மாவிடம் வழங்கி வாழ்த்து பெற்றார்.

விழுப்புரம் மாவட்டம் சின்னபாபு சமுத்திரத்தில் உள்ள ஸ்ரீ மகான் படேசாயுபு ஜீவ சமாதி சித்தர் பீடத்தின் 158ம் ஆண்டு மகா குருபூஜை திருவிழாவுக்கான அழைப்பிதழை, முன்னாள் அமைச்சர் ஆனந்தன் மற்றும் விழுப்புரம் சுதாகர் ஆகியோர் அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மாவிடம் வழங்கி வாழ்த்துப் பெற்றனர்.

Night
Day