அஇஅதிமுகவுக்கு புரட்சித்தாய் சின்னம்மா தலைமையேற்று வழிநடத்த வேண்டும் - தொண்டர்கள் வேண்டுகோள்

எழுத்தின் அளவு: அ+ அ-

அஇஅதிமுக பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா, கழகத்திற்கு தலைமையேற்று வழிநடத்த வேண்டும் என்றும் அனைத்து தரப்பினரையும் ஒருங்கிணைத்து, எல்லோரும் ஒற்றுமையோடு செயல்பட, நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நிர்வாகிகளும், தொண்டர்களும் வலியுறுத்தியுள்ளனர்.

புரட்சித்தலைவி அம்மாவின் ஆட்சியை தமிழகத்தில் மீண்டும் மலரச் செய்ய உறுதியேற்றுள்ள அஇஅதிமுக பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா இந்த உன்னத நோக்கத்தை நிறைவேற்றும் வகையில் அனைத்து தரப்பினரையும் ஒன்றிணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். வரும் 2026 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலில் கழகம் அமோக வெற்றி பெற்று, புரட்சித்தலைவி அம்மாவின் ஆட்சி மீண்டும்  மலர வேண்டுமானால், அஇஅதிமுகவுக்கு புரட்சித்தாய் சின்னம்மா தலைமையேற்று வழிநடத்த வேண்டும் என கழக நிர்வாகிகள், தொண்டர்கள் உள்ளிட்ட அனைவரும் வேண்டுகோள் விடுத்து வருகிறார்கள். விரைவில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவிருக்கும் புரட்சித்தாய் சின்னம்மா, தற்போது, கழகத் தொண்டர்களை சந்தித்து வருகிறார். சின்னம்மாவை சந்திக்க வரும் கழகத் தொண்டர்களும் நிர்வாகிகளும் இந்த கோரிக்கையை தொடர்ந்து வலியுறுத்திய வண்ணம் இருக்கிறார்கள்.

Night
Day