எழுத்தின் அளவு: அ+ அ- அ
கும்பகோணம் அருகே உத்தமதானி நெல் கொள்முதல் நிலையத்தில் போதிய இடவசதி இல்லாமல் தரையில் கொட்டி வைக்கப்பட்டுள்ள நெல்மணிகள் மழையில் நனைந்து வீணாவது வேதனை அளிப்பதாக தெரிவித்துள்ள அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா, இதற்கு காரணமான விளம்பர திமுக அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், கும்பகோணம் அருகே உத்தமதானி நெல் கொள்முதல் நிலையத்தில் போதிய இட வசதி இல்லாமல் கிட்டத்தட்ட 20 ஆயிரம் நெல் மூட்டைகள் தேக்கம் அடைந்து இருப்பதால், தரையில் கொட்டி வைத்துள்ள நெல்மணிகள் மழையில் நனைந்து வீணாகியிருப்பது மிகவும் வேதனை அளிக்கிறது என தெரிவித்துள்ளார். இந்த அவல நிலைக்கு காரணமான திமுக தலைமையிலான விளம்பர அரசுக்கு தனது வன்மையான கண்டனத்தை தெரிவித்துக் கொள்வதாகவும் புரட்சித்தாய் சின்னம்மா குறிப்பிட்டுள்ளார்.
கோடை குறுவை நெல் சாகுபடி செய்து, அறுவடை செய்யப்பட்ட நெல் மணிகளை, கொள்முதல் நிலையங்களுக்கு கொண்டுவரும் விவசாயிகள், அங்கு போதிய இடவசதி இல்லாமல் தரையிலேயே கொட்டி வைத்து தார்ப்பாய் போட்டு மூடி வைத்துள்ள நிலையில் அவை அனைத்தும் மழையில் நனைந்து முளைக்க தொடங்கிவிட்டன - தமிழக விவசாயிகள் பல்வேறு நெருக்கடிகளை கடந்து, தாங்கள் பாடுபட்டு விளைவித்த நெல் மணிகளை, இந்த கையாலாகாத திமுக தலைமையிலான அரசால் முற்றிலும் இழந்து, செய்வதறியாது இன்றைக்கு பரிதவித்து நிற்கின்றனர் என புரட்சித்தாய் சின்னம்மா வேதனை தெரிவித்துள்ளார்.
தமிழக மக்களோ பல்வேறு இன்னல்களுக்கு நாள்தோறும் ஆளாகி வருகின்றனர் - தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் முறையான குடிநீர் விநியோகம் இல்லாததால், மக்கள் காலி குடங்களுடன் வீதியில் நின்று போராடுகின்றனர் - சென்னை மாநகரமோ குப்பைகளால் நிரம்பி வழிந்து கொண்டிருக்கிறது - துப்புரவு பணிகளை தனியாருக்கு தாரை வார்த்துவிட்டதால் அனைத்து தூய்மை பணியாளர்களும் போராட்டத்தில் இறங்கியுள்ளதாக புரட்சித்தாய் சின்னம்மா தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் இன்றைக்கு சட்டம் ஒழுங்கு எந்த அளவிற்கு மோசமாகிவிட்டது என்று அனைவருக்கும் வெட்டவெளிச்சமாகிவிட்டது என்றும், எங்கு பார்த்தாலும் கொலை, கொள்ளை, பெண்களுக்கு பாதுகாப்பற்ற நிலை, குறிப்பாக பெண் குழந்தைகள் இன்றைக்கு பள்ளிக்கூடத்திற்கு கூட வெளியில் செல்ல முடியாத ஒரு அவல நிலைதான் உள்ளது என்றும் புரட்சித்தாய் சின்னம்மா குறிப்பிட்டுள்ளார்.
தமிழகத்தில் யாருக்குமே பாதுகாப்பு இல்லை என்றும், இன்னும் சொல்லப்போனால் காவல்துறை அதிகாரியையே சர்வசாதாரணமாக படுகொலை செய்வதும் அரங்கேறி வருவதாகவும், தமிழக மக்களை காக்கவேண்டிய காவல்துறையினருக்கே பாதுகாப்பு இல்லாத ஒரு மோசமான நிலை மிகவும் வெட்கக்கேடானது என்றும் புரட்சித்தாய் சின்னம்மா கடுமையாக சாடியுள்ளார்.
ஆனால், திமுகவினருக்கு இதைப்பற்றியெல்லாம் கொஞ்சமும் கவலையில்லை - அவர்களுக்கு எப்படியாவது தமிழக மக்களை மீண்டும் ஏமாற்றிவிடலாம் என்ற நப்பாசையில் தேர்தல் பிரச்சாரத்திற்கு கிளம்பிவிட்டதாக விமர்சித்துள்ள புரட்சித்தாய் சின்னம்மா, திமுகவினர் ஒவ்வொரு நாளும் கூட்டணி கட்சித்தலைவர்களை சந்தித்து தங்களை பற்றி தவறாக பேசிவிடாதீர்கள் என்று சொல்லி அவர்களை ஏமாற்றி வருகின்றனர் என தெரிவித்துள்ளார்.
ஆனால் திமுகவினர் தமிழக மக்களை இனிமேலும் ஏமாற்ற முடியாது என்பதை புரிந்துகொள்ள வேண்டும் - ஆட்சி மாற்றம் ஒன்றே தமிழக மக்களின் இன்னல்களுக்கு நிரந்தர தீர்வாக அமையும் - புரட்சித்தலைவர் மற்றும் புரட்சித்தலைவி அம்மா வழிநடத்திய அதே பொற்கால ஆட்சிதான் அடுத்து அமையவிருக்கிறது என உறுதிபடத் தெரிவித்துள்ள கழகப் பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா, அதன்பிறகுதான் தமிழகத்திற்கு விடிவு காலம் பிறக்கும் என்றும் தமிழக மக்களுக்கு பாதுகாப்பு, விவசாயிகளின் வாழ்வாதாரம் என அனைத்து நன்மைகளும் கிடைக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
எனவே திமுகவினரை வீட்டுக்கு அனுப்ப தமிழக மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து சட்டமன்ற தேர்தல் நாளினை எதிர்நோக்கி அமைதியாக காத்துக்கொண்டிருக்கின்றனர் என்பதை இந்நேரத்தில் தெரிவித்துக் கொள்வதாக அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா குறிப்பிட்டுள்ளார்.