எழுத்தின் அளவு: அ+ அ- அ
நடிகர் நாக சைதன்யாவை விவாகரத்து செய்ததை அரசியலாக்க வேண்டாம் என தெலங்கானா அமைச்சர் சுரேகாவின் சர்ச்சை கருத்துக்கு நடிகை சமந்தா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
தமிழ், தெலுங்கில் முன்னணி கதாநாயகியாக வலம் வரும் சமந்தா, கடந்த 2017-ம் ஆண்டு தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதலித்து இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர். பின்னர் ஒரு சில காரணத்தால் விவாகரத்து பெற்று பிரிந்தார். கருத்து வேறுபாடு காரணமாக பிரிவதாக அவர்கள் அறிவித்தாலும், சரியான காரணத்தை வெளிப்படையாக கூறவில்லை. இந்த நிலையில், அவர்களின் விவகாரத்துக்கு முன்னாள் அமைச்சர் கே.டி ராமா ராவ் தான் காரணம் என்று தெலங்கானா அமைச்சர் கொண்டா சுரேகா பேசியிருந்தார். இதற்கு கண்டனம் தெரிவித்த நடிகை சமந்தா, தனது விவகாரத்து பரஸ்பர சம்மதத்துடன் இணக்கமாக நடந்ததாக கூறினார். இதில் அரசியல் சதி இல்லை என்றும் விளக்கம் அளித்தார்.