மனைவி ஆர்த்தியை பிரிவதாக ஜெயம் ரவி அறிவிப்பு

எழுத்தின் அளவு: அ+ அ-

தனது திருமண உறவிலிருந்து விலகுவதாக நடிகர் ஜெயம் ரவி வெளியிட்ட அறிவிப்பால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர். 

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், நீண்ட கால யோசனை மற்றும் பல்வேறு கட்ட பரீசலனைகளுக்கு பிறகு தனது மனைவி ஆர்த்தி உடனான திருமண வாழ்வில் இருந்து விலக முடிவெடுத்துள்ளதாக தெரிவித்தார். மேலும் இந்த முடிவு எளிதாக எடுக்கப்பட்டதல்ல என்றும் தன்னை சார்ந்தவர்களின் நலனை கருத்தில் கொண்டும் அவர்களின் நல்வாழ்விற்காக எடுக்கப்பட்டது என்றும் தெரிவித்தார். இந்த நேரத்தில் தனது தனியுரிமையையும், தனக்கு நெருக்கமானவர்களின் தனியுரிமைகளுக்கு மதிப்பளிக்கும்படியும் வேண்டுகோள் விடுத்தார். ஏற்கனவே ஜெயம்ரவி - ஆர்த்தி தம்பதி விவாகரத்து செய்து கொண்டதாக வதந்திகள் பரவிய நிலையில், ஜெயம்ரவி தற்போது வெளியிட்ட இந்த அறிவிப்பால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

Night
Day