நடிகர் வடிவேலு நீதிமன்றத்தில் ஆஜர்

எழுத்தின் அளவு: அ+ அ-

நடிகர் சிங்கமுத்துவுக்கு எதிரான மான நஷ்ட ஈடு வழக்கில், நடிகர் வடிவேலு மாஸ்டர் நீதிமன்றத்தில் ஆஜரானார். 


நடிகர் சிங்கமுத்து தன்னை பற்றி அவதூறு கருத்தை தெரிவித்ததாக கூறி, 5 கோடி ரூபாய் மான நஷ்ட ஈடு கேட்டு நடிகர் வடிவேலு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கில் வாக்குமூலம் அளிப்பதற்காக நடிகர் வடிவேலு, மாஸ்டர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜரானார். அப்போது சிங்கமுத்து தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், குறுக்கு விசாரணை நடத்த அனுமதி கேட்டு உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளதால் வாக்குமூலத்தை இரண்டு வாரங்களுக்கு தள்ளிவைக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். அதனை பதிவு செய்துகொண்ட நீதிபதி, வழக்கை உயர்நீதிமன்றத்திற்கு அனுப்பி வைத்தார்.

varient
Night
Day