ஜெயம்ரவி - ஆர்த்தி சமரச பேச்சுவார்த்தை தோல்வி

எழுத்தின் அளவு: அ+ அ-

நடிகர் ரவி மோகன் மற்றும் ஆர்த்தி தம்பதி இடையேயான சமரச பேச்சுவார்த்தையை நிறைவு செய்த பின்னர் விவாகரத்து வழக்கு விசாரிக்கப்படும் என சென்னை குடும்ப நல நீதிமன்றம் தெரிவித்துள்ளது. கருத்து வேறுபாடு காரணமாக நடிகர் ரவி தனது மனைவியிடம் இருந்து விவாகரத்து கேட்டு சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், சமரச தீர்வு மையத்தில் பேச்சுவார்த்தை நடத்த உத்தரவிட்டிருந்தது. அதன்படி நடிகர் ரவி, ஆர்த்தி ஆகியோர் சமரச தீர்வு மையத்தில் ஆஜராகி பேச்சுவார்த்தை நடத்தி வந்தனர். இந்நிலையில் இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்த நிலையில் சமரச பேச்சுவார்த்தையை நிறைவு செய்த பின்னர் விவாகரத்து வழக்கு விசாரிக்கப்படும் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

Night
Day