சாதாரண பயணிகள் விமானத்தில் பயணம் செய்த நடிகர் ரஜினிகாந்த்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

நடிகர் ரஜினிகாந்த் மிக எளிமையான தோற்றத்தில் சாதாரண பயணிகள் விமானத்தில் பயணிக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. ஜெய்பீம் பட இயக்குநர் ஞானவேல் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் "வேட்டையன்" திரைப்படம் உருவாகி வருகிறது. இந்தாண்டு "வேட்டையன்" படம் வெளியாகவுள்ளதால் ரஜினிகாந்த் படப்பிடிப்பில் பிஸியாக உள்ளார். இந்நிலையில், ரஜினிகாந்த் ஆந்திர மாநிலம் கடப்பாவிலிருந்து சென்னைக்கு சாதரண பயணிகள் விமானத்தில் மிக எளிமையாக பயணம் செய்துள்ளார். விமானத்தில் பயணி ஒருவருடன் ரஜினிகாந்த் எளிமையான முறையில் பேசிய வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. 

Night
Day