கொலை மிரட்டல் விடுத்ததாக பிரபல நடிகை சரண்யா பொன்வண்ணன் மீது கொலை மிரட்டல் புகார்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

கொலை மிரட்டல் விடுத்ததாக பிரபல நடிகை சரண்யா பொன்வண்ணன் மீது கொலை மிரட்டல் புகார் அளிக்கப்பட்டுள்ளது. சென்னை விருகம்பாக்கத்தில் நடிகை சரண்யா பொன்வண்ணன் குடும்பத்துடன் வசித்து வருகிறார். கார் நிறுத்துவது தொடர்பாக அவருக்கும் பக்கத்து வீட்டாருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், தங்களுக்கு நடிகை சரண்யா பொன்வண்ணன் கொலை மிரட்டல் விடுத்ததாக, பக்கத்து வீட்டில் வசிக்கும் ஸ்ரீதேவி என்பவர் விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இது தொடர்பான சிசிடிவி காட்சிகளையும் போலீசாரிடம் அவர் வழங்கியுள்ளார். இதுகுறித்து விருகம்பாக்கம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Night
Day