சினிமா
இளைஞர்களுக்கு நடிகர் ரஜினிகாந்த் அறிவுரை
நம் நாட்டின் கலாச்சாரம், சம்பிரதாயங்களை இளைஞர்களிடம் கொண்டு சேர்க்க வேண்...
இந்து மத உணர்வுகளை புண்படுத்தியுள்ளதாக கல்கி 2898 ஏடி திரைப்பட குழுவுக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இயக்குநர் நாக் அஸ்வின் இயக்கத்தில், நடிகர் பிரபாஸ் நடிப்பில் கல்கி 2898 ஏடி திரைப்படம் வெளியாகி வசூலை குவித்தது. இந்நிலையில், உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த ஆச்சார்யா பிரமோத் என்பவர் கல்கி திரைப்படத்தில் இந்து மத உணர்வுகளை புண்படுத்தியுள்ளதாகவும், கல்கி அவதாரம் தவறாக சித்தரிக்கப்பட்டு, புராணக்கதைகளை திரித்து படமாக எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இதனையடுத்து, படத்தின் தயாரிப்பாளர் நாக் அஸ்வின், நடிகர்கள் பிரபாஸ், அமித்தாப் பட்சன் உள்ளிட்டோருக்கு விளக்கம் கேட்டு வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அதுவரை, படத்தை ஓடிடியில் வெளியிடக்கூடாது என்றும் ஆச்சார்யா பிரமோத் வலியுறுத்தியுள்ளார்.
நம் நாட்டின் கலாச்சாரம், சம்பிரதாயங்களை இளைஞர்களிடம் கொண்டு சேர்க்க வேண்...
ஏடிஎம் பரிவர்த்தனை, ரயில் டிக்கெட் முன்பதிவு உள்ளிட்ட 6 புதிய விதிமுறை மாற...