மூன்றாம் உலகப்போர் தொடங்கிவிட்டது - உக்ரைனின் முன்னாள் ராணுவ தளபதி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

ரஷ்யா - உக்ரைன் போர் நடைபெற்று வருவதற்கு மத்தியில் மூன்றாம் உலகப்போர் தொடங்கிவிட்டதாக உக்ரைனின் முன்னாள் ராணுவ தளபதி தெரிவித்துள்ளார். 

உக்ரைன்ஸ்கா பிராவ்டாவின் விருது வழங்கும் விழாவில் பேசிய உக்ரைனின் முன்னாள் ராணுவ தளபதியும் பிரிட்டனுக்கான உக்ரைன் தூதருமான வலேரி ஜலுஷ்னி, 2024ம் ஆண்டு உலகப்போர் தொடங்கிவிட்டதாக தெரிவித்துள்ளார். ரஷ்யா-உக்ரைன் மோதலில் ரஷ்யாவின் நட்பு நாடுகள் நேரடியாக போரில் ஈடுபட்டிருப்பது 3ம் உலக போர் தொடங்கிவிட்டது என்பதற்கான அர்த்தம் எனவும் அவர் கூறியுள்ளார். மேலும், நாட்டின் எல்லைகளுக்கு அப்பால் பரவும் மோதலை தடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார். 

varient
Night
Day