ஜோ பைடன் தட்டுத் தடுமாறி செல்லும் வீடியோ இணையத்தில் வைரல்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

அமெரிக்க அதிபர் ஜோ பைடன், கடற்கரை மணலில் தட்டு தடுமாறி நடந்து செல்லும்
வீடியோ காட்சிகள் இணையங்களில் வைரலாகி வருகிறது. 81 வயதான அமெரிக்க அதிபர் ஜோ பைடன், தனது மனைவி ஜில் பைடனுடன் டெலாவெர் கடற்கரையில் நடந்து செல்கிறார். அப்போது சமனின்றி இருக்கும் கடற்கரை மணலில் நடக்க முடியாமல், ஒரு குழந்தையை போல் ஒவ்வொரு அடியாக எடுத்து வைக்கிறார், ஜோ பைடன். இந்நிலையில் அமெரிக்க அதிபராக இன்னும் 70 நாட்களுக்கும் மேல் பதவிக்காலம் உள்ள நிலையில், ஜோ பைடனால் கடற்கரை மணலில் கூட நடக்க முடியவில்லையா என நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர். 

varient
Night
Day