கஜகஸ்தான் விமான விபத்து - 42 பேர் பலி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

அஜர்பைஜானில் இருந்து ரஷியாவுக்கு புறப்பட்ட பயணிகள் விமானம் கஜகஸ்தானில் விபத்துக்குள்ளானதில் 42 பேர் உயிரிழந்தனர்.

அஜர்பைஜான் தலைநகர் பாகுவில் இருந்து ரஷியாவின் க்ரோஸ்னி நகருக்கு 67 பயணிகள் உட்பட 72 பேருடன் அஜர்பைஜான் ஏர்லைன்ஸ் விமானம் புறப்பட்டது. கடும் பனிமூட்டம் காரணமாக விமானம் கஜகஸ்தானுக்கு திருப்பிவிடப்பட்டுள்ளது.

Azerbaijan Airlines passenger plane enroute to Russia with over 70 people  onboard crashes in Kazakhstan | Indiablooms - First Portal on Digital News  Management


அப்போது கஜகஸ்தானின் அக்தாவ் விமான நிலையத்தில் விமானத்தை அவசரமாக தரையிறக்க விமானி கோரிக்கை விடுத்ததாக கூறப்படுகிறது. சிறிது நேரம் வானில் வட்டமடித்த பிறகு விமானத்தை பத்திரமாக தரையிறக்க விமானி முயன்றதாக தெரிகிறது. இருப்பினும் நிலைமை எல்லைமீறியதால் விமான நிலையம் அருகிலேயே விமானத்தை விமானி தரையிறக்க முயன்றார். அப்போது, கட்டுப்பாட்டை இழந்த விமானம், கீழே விழுந்து நொறுங்கி வெடித்து சிதறியது.

Survivors of AZAL's plane crash in Kazakhstan may exceed 10 -UPDATED


இந்த கோர விபத்தில் விமானத்தில் பயணித்தவர்களில் 42 பேர் உயிரிழந்ததாக கூறப்பட்டுள்ள நிலையில், 25க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து குறித்து விளக்கம் அளித்துள்ள ரஷ்யாவின் விமான போக்குவரத்து கண்காணிப்பு அமைப்பு, பறவை தாக்கிய பிறகு, விமானத்தை அவசரமாக தரையிறக்கும்போது விபத்து நிகழ்ந்ததாக தெரிவித்துள்ளது. 


Night
Day