2-வது கட்ட மக்களவை தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்றுடன் நிறைவு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

இரண்டாவது கட்ட மக்களவைத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்றுடன் நிறைவடைகிறது.


இரண்டாவது கட்டத்தில், அசாம், பீகார், சத்தீஸ்கர், கர்நாடகா, கேரளா, மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், திரிபுரா, உத்தரபிரதேசம் மற்றும் மேற்கு வங்கம் உள்ளிட்ட 11 மாநிலங்கள் மற்றும் ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசம் உள்ளிட்ட 88 மக்களவைத் தொகுதிகளுக்கு வரும் 26-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனுத் தாக்கல் கடந்த 28-ம் தேதி தொடங்கியது.  வேட்புமனுத் தாக்கல் செய்வதற்கு இன்று கடைசி நாள் என்ற நிலையில், மற்ற மாநிலங்களில் நாளையும் ஜம்மு-காஷ்மீரில் நாளை மறுநாளும் வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நடைபெற உள்ளது.

Night
Day