ரயில்களில் குழந்தைகளுக்கென தனி படுக்கை வசதி...!

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

ரயில்களில் குழந்தைகளுக்கென தனி படுக்கை வசதி அமைப்பதில் சிரமம் இருப்பதாக மத்திய ரயில்வே அமைச்சகம் விளக்கமளித்துள்ளது. மாநிலங்களவையில் உரையாற்றிய மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், லக்னோ ரயிலில் குழந்தைகளோடு செல்லும் பெண்கள் வசதிக்காக குழந்தைகளுக்கென தனி படுக்கை வசதி சோதனை அடிப்படையில் செயல்படுத்தப்பட்டதாக தெரிவித்தார். இந்த புதிய முயற்சிக்கு பாராட்டுக்கள் கிடைத்தாலும், உடமைகளை வைக்க இடப் பற்றாக்குறை மற்றும் இருக்கையில் அமர்வோர் இடையிலான இடைவெளி குறைதல் உள்ளிட்ட அசவுகரியங்கள் கண்டறியப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். 

Night
Day