யாத்திரைக்‍கு நடுவில் இருசக்‍கர வாகன ஓட்டிகளிடம் உரையாடிய ராகுல்காந்தி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

பாரத் ஜோடோ நியாய யாத்திரை மேற்கொண்டுள்ள காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, தனது பயணத்திற்கு இடையே இருசக்‍கர வாகன ஓட்டிகளை சந்தித்து அவர்க​ளுடன் வாகனம் குறித்து கலந்துரையாடினார்.  67 நாட்கள் 110 மாவட்டங்கள் வழியாக ராகுல்காந்தி பாரத் ஜோடோ நியாய யாத்திரை  மேற்கொள்கிறார். மணிப்பூ​ரில் இருந்து அவர் பயணத்தைத் தொடங்கிய நிலையில், 
நாகாலாந்து மாநிலம் மொகோக்சுங்கில் வித்தியாசமாக வடிவமைக்‍கப்பட்டிருந்த இருசக்கர வாகன ஓட்டிகளுடன் கலந்துரையாடினார். வழக்‍கம் இருசக்‍கர வாகனங்கள் மீது அதிக விருப்பம் கொண்டவரான ராகுல்காந்தி, தனது பயணத்திற்கு நடுவிலும் ஆர்வத்துடன் அவர்களுடன் கலந்துரையாடிய காட்சி வெளியாகி உள்ளது. 

varient
Night
Day