மறைந்த முன்னாள் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் உடலுக்கு பிரதமர் மோடி நேரில் சென்று அஞ்சலி

எழுத்தின் அளவு: அ+ அ-

மறைந்த முன்னாள் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் உடலுக்கு பிரதமர் மோடி நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.


முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், இந்தியா மதிப்புக்குரிய தலைவர்களுள் ஒருவரை இழந்திருப்பதாகவும்,  நிதியமைச்சர் உள்பட அரசின் பல்வேறு பதவிகளில் பொறுப்பு வகித்த அவர் பொருளாதாரக் கொள்கையில் ஆழமான தடத்தை விட்டுச் சென்றிருப்பதாக குறிப்பிட்டார். மேலும் மக்களின் வாழ்க்கை மேம்பட அவர் பரந்தளவிலான முயற்சிகளை எடுத்தவர் என்றும் தெரிவித்துள்ளார்.

Night
Day