மத்திய அமைச்சர்கள், காங்கிரஸ் தலைவர்கள் வாக்களிப்பு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

பெங்களூரில் உள்ள பிஇஎஸ் வாக்குச்சாவடியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தன்னுடைய வாக்கை செலுத்தினார். அப்போது பேசிய அவர், மக்கள் அனைவரும் வாக்களிக்க வேண்டும் எனவும், நிலையான ஆட்சியையும், வளர்ச்சியையும் மக்கள் விரும்புவதாகவும் கூறினார். 


இதனிடையே காங்கிரஸ் பொதுச்செயலாளரும், ஆலபுழா தொகுதியின் வேட்பாளருமான கே.சி.வேணுகோபால் அத்தொகுதியில் உள்ள வாக்குச்சவாடியில் தன்னுடைய வாக்கை செலுத்தினார். அப்போது பேசிய வேணுகோபால், ஆலப்புழா மக்கள் தன்னுடன் நிற்பதாகவும், முதற்கட்ட தேர்தலுக்கு பின்னர் பிரதமர் மோடி பீதியில் உள்ளதாகவும் விமர்சித்தார்.

திருவனந்தபுரம் தொகுதியின் காங்கிரஸ் வேட்பாளர் சசி தரூர், அத்தொகுதியில் உள்ள வாக்குச்சாவடியில்  தன்னுடைய வாக்கை செலுத்தினார்.

முன்னாள் இந்திய பிரதமர் எச்.டி. தேவ கவுடா கர்நாடகா மாநிலம் ஹாசன் பகுதியில் உள்ள வாக்குச்சாவடியில் தன்னுடைய வாக்கை பதிவு செய்தார்.

கர்நாடகாவின் சாமராஜநகரில் உள்ள வாக்குச்சாவடியில் அம்மாநிலத்தின் முதலமைச்சர் சித்தராமையா தன்னுடைய வாக்கை பதிவு செய்தார். பின்னர் வாக்கு பதிவு செய்து வெளியில் வந்த அவர், தன்னுடைய கைகளை உயர்த்தி காண்பித்தார்.

ராஜஸ்தான் மாநிலத்தின் முன்னாள் முதல்வர் அசோக் கெலாட் ஜோத்பூரில் உள்ள வாக்குச்சவாடியில் தன்னுடைய வாக்கை செலுத்தினார்.

மத்திய அமைச்சரும் ஜோத்பூர் தொகுதியின் பாஜக வேட்பாளருமான கஜேந்திர சிங் ஷேகாவத் அத்தொகுதியில் உள்ள வாக்குச்சாவடியில் தன்னுடைய வாக்கை செலுத்தினார்.

மத்திய அமைச்சரும் கேரளாவின் அட்டிங்கள் தொகுதியின் பாஜக வேட்பாளருமான முரளிதரன் அத்தொகுதியில் உள்ள வாக்குச்சாவடியில் தன்னுடைய வாக்கை பதிவு செய்தார்.

கர்நாடகா முன்னாள் முதல்வரும், மாண்ட்யா தொகுதியின் மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் வேட்பாளருமான குமாராசாமி, ராமநகரா வாக்குச்சாவடியில் தன்னுடைய வாக்கை பதிவு செய்தார்.

மத்திய பிரதேசத்தின் துணை முதல்வர் ராஜேந்திர சுக்லா, ரேவா பகுதியில் உள்ள வாக்குச்சாவடியில் தன்னுடைய வாக்கை பதிவு செய்தார்.

இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் தலைவர் சோம்நாத், கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் தன்னுடைய வாக்கை பதிவு செய்தார்.
 
மலையாள திரையுலகின் முன்னணி நடிகர்களுள் ஒருவரான டொவினோ தாமஸ், திருச்சூர் இரிங்கலகுடாவில் உள்ள வாக்குச்சாவடியில் தன்னுடைய வாக்கை செலுத்தினார்.





Night
Day