5ம் கட்ட மக்களவை தேர்தலில் 1 மணி நிலவரப்படி 36.73 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக இந்திய தலைமை தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் 49 மக்களவை தொகுதிகளில் இன்று 5ம் கட்ட வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மதியம் 1 மணி நிலவரப்படி, 49 மக்களவைத் தொகுதிகளிலும் 36.73 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. பீகாரில் 34.62 சதவீத வாக்குகளும், ஜம்மு காஷ்மீரில் 34.79 சதவீத வாக்குகளும், ஜார்கண்ட் மாநிலத்தில் 41.89 சதவீத வாக்குகளும், லடாக்கில் 52.2 சதவீத வாக்குகளும் பதிவாகியுள்ளது. இதேபோல் மகாராஷ்டிராவில் 27.78 சதவீத வாக்குகளும், ஒடிசாவில் 35.31 சதவீத வாக்குகளும், உத்தரப்பிரதேசத்தில் 39.55 சதவீத வாக்குகளும், மேற்கு வங்கத்தில் 48.41 சதவீத வாக்குகளும் பதிவாகியுள்ளது. அதோடு ஒடிசாவில் நடைபெறும் 35 சட்டமன்ற தொகுதிக்கான 2ம் கட்ட தேர்தலில் மதியம் 1 மணி நிலவரப்படி 35.31 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக இந்திய தலைமை தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.