பள்ளிக்கல்வியில் கட்டாய தேர்ச்சி முறையில் மாற்றம்

எழுத்தின் அளவு: அ+ அ-

ஒன்று முதல் 8ம் வகுப்பு வரை கட்டாய தேர்ச்சி என்ற முறையில் மாற்றம் கொண்டு வர மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக மத்திய கல்வித்துறை செயலாளர் சஞ்சய் குமார் தெரிவித்துள்ளார்.

பள்ளிக்கல்வியில் ஒன்று முதல் 8ம் வகுப்பு வரை கட்டாய தேர்ச்சி எனும் நடைமுறை நாடு முழுவதும் அமலில் உள்ளது. 9-ஆம் வகுப்பு மாணவர்கள் கட்டாயம் தேர்ச்சி பெற வேண்டும் எனவும், 10, 11 மற்றும் 12  ஆகிய வகுப்புகளுக்கு பொது தேர்வுகள் நடத்த வேண்டும் என நடைமுறை உள்ளது. ஆனால் 1 முதல் 8ஆம் வகுப்பு கட்டாய தேர்ச்சி என்ற முறையில் மாற்றத்தை கொண்டு வர மத்திய கல்வி அமைச்சகம் முடிவு செய்துள்ளதாக மத்திய கல்வித்துறை செயலாளர் சஞ்சய் குமார் தெரிவித்துள்ளார். குறிப்பாக, 5 மற்றும் 8ம் வகுப்புகளுக்கு நடைபெறும் ஆண்டு தேர்வில் தோல்வியடையும் மாணவர்களுக்கு மீண்டும் இரண்டு மாதங்களில் மறு தேர்வு நடத்த வாய்ப்பு வழங்கப்படும் என்ற வகையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஒருவேளை இரண்டு மாதங்களுக்குப் பிறகு நடைபெறும் மறு தேர்விலும் தேர்ச்சி அடையாத மாணவர்களுக்கு வகுப்பு உயர்வு வழங்கப்படாது என்றும், 8ஆம் வகுப்பு வரை தேர்ச்சியடையாத மாணவர்கள் உயர் வகுப்புகளுக்கு மாற்றப்பட முடியாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பள்ளி குழந்தைகளின் கற்றல் திறனை மேம்படுத்தும் நோக்கிலே மத்திய அரசு இத்தகைய முடிவு எடுத்துள்ளதாக மத்திய கல்வித்துறை செயலாளர் சஞ்சய் குமார் கூறியுள்ளார்.

Night
Day