இந்தியா
டெல்லியில் அமைச்சரை நோக்கி துப்பாக்கிச்சூடு
டெல்லியில் அமைச்சரை நோக்கி துப்பாக்கிச்சூடுடெல்லியில் தொழில்துறை அமைச...
தெலங்கானாவில் அரசு மருத்துவமனையில் நோயாளியை எலி கடித்த விவகாரத்தில் 2 மருத்துவர்கள் மற்றும் ஒரு செவிலியர் பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். தெலங்கானா மாநிலம் காமரெட்டி பகுதியில் உள்ள அரசு மருத்துவமனையில் முஜீபுதின் என்பவர், ஐசியூவில் அனுமதிக்கப்பட்டார். கடந்த 9ம் தேதி அவரது கை, கால் விரல்களில் எலி கடித்துள்ளது. இதுகுறித்து உறவினர்கள் மருத்துவமனை நிர்வாகத்திடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதையடுத்து சுகாதாரத்துறை அதிகாரிகளிடமும் புகார் அளித்தனர். இதன்பேரில், அவசர சிகிச்சை பிரிவில் பணியில் இருந்த மருத்துவர் காவ்யா, பொது மருத்துவ அலுவலர் வசந்த குமார் மற்றும் செவிலியர் மஞ்சுளா ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
டெல்லியில் அமைச்சரை நோக்கி துப்பாக்கிச்சூடுடெல்லியில் தொழில்துறை அமைச...
துணை முதல்வரின் பி.ஏ தனக்கு மிக நெருக்கமானவர் எனவும், ஆசிரியர் பணி, கிரா?...