சிவில் விமான போக்குவரத்து - இந்தியாவில்தான் பெண் விமானிகள் அதிகம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சிவில் விமான போக்குவரத்துத்துறையில் இந்தியாவில்தான் பெண் விமானிகள் அதிகம் இருப்பதாக தேசிய மகளிர் ஆணையம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் சிவில் விமான போக்குவரத்துத்துறையில் உள்ள மொத்த விமானிகளில் 12.4 சதவீதம் பேர் பெண்கள் என்பது கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது. உலக சராசரியைவிட இது 3 மடங்கு அதிகமாகும். இந்தியாவுக்கு அடுத்ததாக அயர்லாந்தில் 9.9 சதவீதம், தென் ஆப்பிரிக்காவில் 9.8 சதவீதம் பெண்கள் சிவில் விமான போக்குவரத்துத்துறையில் விமானிகளாக உள்ளனர். இவை தவிர, அமெரிக்காவில் 5.5 சதவீதம் பெண்களும், இங்கிலாந்து 4.7 சதவீதம் பெண்களும் சிவில் விமான போக்குவரத்துத்துறையில் விமானிகளாக உள்ளனர்.

varient
Night
Day