உத்தரப்பிரதேசம்: 3 இளைஞர்கள் மீது கார் மோதியதில் 2 பேர் பலி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

உத்தரப்பிரதேசத்தில் சாலையோரம் நடந்து சென்ற 3 இளைஞர்கள் மீது அதிவேகமாக வந்த கார் மோதிய விபத்தின் பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம் கோரக்பூரில் நேற்றிரவு 3 இளைஞர்கள் உணவு அருந்திவிட்டு சாலையோரம் நடந்து சென்றுள்ளனர். அவ்வழியே அதிவேகமாக வந்த சொகுசு கார், இளைஞர்கள் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இதில் 2 பேர் இறந்துவிட்டதாகவும், ஒருவர் படுகாயங்களுடன் மருத்துவமனயில் சிகிச்சை பெற்று வருவதாகவும் போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் கோர விபத்தை ஏற்படுத்திய கார் ஓட்டுநரை தேடி வருகின்றனர். 

Night
Day