உஜ்வாலா இலவச சமையல் எரிவாயு மானிய சிலிண்டர் திட்டம் மேலும் ஓராண்டுக்கு நீட்டிப்பு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

உஜ்வாலா இலவச சமையல் எரிவாயு மானிய சிலிண்டர் திட்டத்தை மேலும் ஓராண்டுக்கு நீட்டித்து மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் டெல்லியில் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் ப்யூஸ் கோயல்,  உஜ்வாலா பயனாளிகளுக்கு 2024-25-ம் நிதியாண்டிலும் சிலிண்டர்களுக்கான 300 ரூபாய் மானியத்தொகையை தொடர்ந்து வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாகவும் இதற்காக 12 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

7-வது மத்திய ஊதியக் குழு பரிந்துரைகளின்படி, மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை 4 சதவீதம் உயர்த்தி வழங்க அமைச்சரவை அனுமதி அளித்துள்ளதாகவும் இது 2024 ஜனவரி 1 முதல் கணக்கிட்டு வழங்கப்படும் எனவும் குறிப்பிட்டார். இதன் மூலம் 49 லட்சத்து 18 ஆயிரம் மத்திய அரசு ஊழியர்களும், 67 லட்சத்து 95 ஆயிரம் ஓய்வூதியதாரர்களும் பயனடைவார்கள் எனத் தெரிவித்தார். 
மேலும் செயற்கை நுண்ணறிவு என்று அழைக்கப்படும் AI துறை வளர்ச்சிக்காக 10 ஆயிரத்து 371 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்வதற்கும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக அமைச்சர் ப்யூஸ் கோயல் கூறினார்.

Night
Day