இந்தியா
5 மாடி கட்டிடத்தில் தீ விபத்து-உயிரிழப்பு 14ஆக அதிகரிப்பு
மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் தனியார் ஓட்டலில் ஏற்பட்ட பயங்கர தீ விபத...
மக்களவை தேர்தலில் போட்டியிட சீட் தராததால் கர்நாடக முன்னாள் முதலமைச்சரான சதானந்த கவுடா அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். கர்நாடக பாஜக மூத்த தலைவரான சதானந்த கவுடா, 2014 ஆம் ஆண்டு மக்களவை தேர்தல் முதல் பெங்களூரு வடக்கு தொகுதியில் போட்டியிட்டு வருகிறார். இந்த ஆண்டு நடைபெற உள்ள மக்களவை தேர்தலில் மத்திய அமைச்சராக உள்ள ஷோபா கரந்தலாஜேவை பெங்களூரு வடக்கு தொகுதி வேட்பாளராக பாரதிய ஜனதா தலைமை அறிவித்துள்ளது. இதனால் ஏமாற்றமும், மனவேதனையும் அடைந்த சதானந்த கவுடா, தாம் அரசியலில் இருந்து விலகப்போவதாக அறிவித்துள்ளார். ஷோபா 2019 ஆம் ஆண்டு உடுப்பி சிக்மகளூரு தொகுதியில் இருந்து போட்டியிட்டு மக்களவை உறுப்பினரானவர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் தனியார் ஓட்டலில் ஏற்பட்ட பயங்கர தீ விபத...
காங்கிரஸ் ஆட்சியில் தான் நீட் தேர்வு சட்டமாக்கப்பட்டது என நிரூபித்தால் ர...