இந்தியா
வரும் 19ம் தேதி அனைத்துக் கட்சி கூட்டம் - மத்திய அரசு அழைப்பு
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் தொடங்க உள்ள நிலையில், வரும் 19ம் தேதி அனை?...
ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் தொடங்கும் அடுத்த நிதியாண்டிலும் நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதாரம் சிறப்பாக இருக்குமென மத்திய நிதியமைச்சகம் நம்பிக்கை தெரிவித்துள்ளது. கடந்த பிப்ரவரி மாதத்துக்கான பொருளாதார மறுஆய்வு அறிக்கை நேற்று வெளியிடப்பட்டது. அதில், நடப்பு நிதியாண்டில் தொடா்ந்து 3 காலாண்டுகளாக நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளா்ச்சி 8 சதவீதத்துக்கும் மேல் பதிவாகி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உலகளாவிய வளா்ச்சி விகிதம் மந்தமாக உள்ள சூழலில், தனித்துவமான செயல்திறன் கொண்ட பொருளாதாரம் என்ற அந்தஸ்தை இந்தியா தக்கவைத்து இருப்பதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. தனியார் முதலீடுகள் அதிகரிப்பு, குறைந்து வரும் பணவீக்கம், நுகர்வு அதிகரிப்பு ஆகியவை இதற்கு முக்கிய காரணங்களாக வகைப்படுத்தப்பட்டுள்ளன.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் தொடங்க உள்ள நிலையில், வரும் 19ம் தேதி அனை?...
தூர்வாராததால் கடைமடைவரை செல்லாத காவிரி நீர்! விவசாயிகளை தொடர்ந்து வஞ்சிக...