அஜித் உட்பட தமிழகத்தை சேர்ந்த 13 பேருக்கு பத்ம விருதுகள் அறிவிப்பு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

2025 குடியரசு தினத்தை முன்னிட்டு தமிழ்நாட்டைச் சேர்ந்த 13 பேருக்கு பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. நடிகர் அஜித் உள்பட பல துறைகளைச் சேர்ந்தவர்கள் இவ்விருதுகளுக்குத் தேர்வாகியுள்ளனர்.

2025ம் ஆண்டுக்கான பத்ம விருதுகளை மத்திய உள்துறை அமைச்சகம் நேற்று அறிவித்தது. அதில் தமிழகத்தைச் சேர்ந்த 13 பேருக்கு பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி, தமிழக தொழில் துறையில் சீரிய முறையில் பங்காற்றிய நல்லி குப்புசாமிக்கு பத்மபூஷன் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. 

நடமாடும் காந்தி மியூசியம்!: - நல்லி குப்புசாமி செட்டியார்


கலைத் துறையில் நடிகர் அஜித்குமாருக்கு பத்மபூஷன் விருது வழங்கி மத்திய அரசு கெளரவிக்கவுள்ளது. 



அதேபோல் நடிகையும், பிரபல பரதக் கலைஞருமான ஷோபனா சந்திரகுமாருக்கு பத்மபூஷன் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

 

அதனைத்தொடர்ந்து தமிழகத்தை சேர்ந்த 10பேருக்கு பத்ம ஸ்ரீ விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதில், தமிழகம் மற்றும் புதுச்சேரியை சேர்ந்த இரண்டு இசை கலைஞர்களுக்கு பத்ம ஸ்ரீ விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. மதுரை மாவட்டம் அலங்காநல்லூரைச் சேர்ந்த பறை இசைக் கலைஞர் வேலு ஆசானுக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது. 50 ஆண்டுகளுக்கும் மேலாக தவில் இசை கலையில் அனுபவம் கொண்ட புதுச்சேரியை சேர்ந்த தவில் இசைக்கலைஞர் தட்சிணாமூர்த்திக்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்படுகிறது. 

தமிழகத்தைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு விளையாட்டுத் துறையில் சிறப்பாக பணியாற்றியதற்காக பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.



தமிழகத்தை சேர்ந்த பிரபல சமையல் கலைஞர் செஃப் தாமுவுக்கு பத்ம ஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.



குருவாயூர் துரைக்கு கலைத்துறையிலும், லட்சுமிபதி ராமசுப்பையருக்கு இலக்கியம் மற்றும் கல்வி பிரிவில் பத்ம ஸ்ரீ விருது வழங்கப்படவுள்ளது. எம்.டி.ஸ்ரீனிவாஸ்-க்கு அறிவியல் மற்றும் கட்டிடக் கலையிலும், ஸ்ரீனி விஸ்வநாதனுக்கு இலக்கியம் - கல்வித்துறையிலும், புரசை கண்ணப்ப சம்பந்தன் மற்றும் ராதாகிருஷ்ணன் தேவசேனாதிபதிக்கு கலைத்துறையிலும், பத்ம ஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது. 

Night
Day