அக்.3-வது வாரத்தில் தென்னிந்தியாவில் வடகிழக்கு பருவமழை தொடங்க வாய்ப்புள்ளது - பாலச்சந்திரன்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

வடகிழக்கு பருவமழை அக்டோபர் 3-வது வாரத்தில் தொடங்குவதற்கான வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மைய தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். 

சென்னை நுங்கம்பாக்கத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழை 18 சதவீதம் அதிகம் பொழிந்துள்ளதாக தெரிவித்தார். மேலும் நெல்லை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை அதிகம் பெய்துள்ளதாகவும், வடகிழக்கு பருவமழை அக்டோபர் 3-வது வாரத்தில் தொடங்க வாய்ப்புள்ளதாகவும் கூறினார். இந்த ஆண்டு குறுகிய காலத்தில் மிக அதிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக கூறிய அவர், தமிழ்நாடு, கேரளா, கடலோர ஆந்திரா, கர்நாடக உள் மாவட்டங்களில் அதிக மழை பெய்யும் என்றும் தெரிவித்துள்ளார். மேலும் வடகிழக்கு பருவமழை இயல்பைவிட 112 சதவீதம் அதிகமாக இருக்கும் எனவும் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். 

Night
Day