கேரளா வெடிவிபத்து - 10 பேர் கவலை - 150-க்கும் மேற்பட்டோர் காயம்

எழுத்தின் அளவு: அ+ அ-

கேரள மாநிலம் காசர்கோடு அருகே கோயில் திருவிழாவில் ஏற்பட்ட பயங்கர வெடிவிபத்தில், 150க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

கேரளா மாநிலம் காசர்கோடு மாவட்டம் நீலேஸ்வரில் உள்ள அஞ்சுதம்பலம் வீரரதகவர் கோயில் திருவிழா நடைபெற்று வருகிறது. இந்த கோயில் திருவிழாவின் முக்கிய நிகழ்வாக நள்ளிரவில் வான வேடிக்கைகள் நடத்தப்பட்டன. வான வேடிக்கைகளின் போது கொளுத்தப்பட்ட பட்டாசுகளின் தீப்பொறி, குடோன் ஒன்றில் வைக்கப்பட்டிருந்த பட்டாசு மூட்டைகளின் மீது விழுந்து பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டது. இதில், வானவேடிக்கையை ரசித்து கொண்டிருந்த 150க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 10 பேரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

varient
Night
Day