குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா கொடியேற்றத்துடன் கோலாகல தொடக்கம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

துாத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகேயுள்ள பிரபித்திபெற்ற குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் தசரா திருவிழா கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கி உள்ளது.

கர்நாடக மாநிலம் மைசூருக்கு அடுத்தபடியாக தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகேயுள்ள குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் தசரா திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. இக்கோவிலில் தசரா விழாவின்போது பக்தர்கள் காப்பு கட்டி, விரதம் இருந்து பல்வேறு வேடங்கள் அணிந்து குழுக்களாக சென்று நேர்த்திக்கடன் செலுத்துவர். இதனிடையே நேற்றிரவு அம்மனுக்கு காப்பு கட்டப்பட்டு இன்று அதிகாலை அலங்கரிக்கப்பட்ட யானை மீது கொடி பட்டம் ஊர்வலம் நடைபெற்றது. இதனை தொடர்ந்து கொடி மரத்துக்கு பால், சந்தனம் உள்ளிட்ட பொருட்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு கொடியேற்றம் நடைபெற்றது.

Night
Day