இலங்கையில் மீண்டும் தலைதூக்‍கும் ராஜபக்‍ச ஆதிக்‍கம் - இளைய சகோதரருக்‍கும் அமைச்சரவையில் முக்‍கிய துறைகள் ஒதுக்‍கீடு

Nov 22 2019 6:39PM
எழுத்தின் அளவு: அ + அ -
இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே, தனது சகோதரர் மகிந்த ராசபக்சேவை பிரதமராக நியமித்த நிலையில், மற்றொரு சகோதரரான சமல் ராஜபக்சேவுக்கு அமைச்சரவையில் முக்கிய துறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

இலங்கையில், அண்மையில் நடைபெற்ற அதிபர் தேர்தலில், பொதுஜன பெரமுனா கட்சியைச் சேர்ந்தவரும், முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சேவின் சகோதரருமான கோத்தபய ராஜபக்சே வெற்றி பெற்றார். இதனால் அதிருப்தியடைந்த இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே, தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து, இலங்கையின் பு‌திய பிரதமராக, முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சேவை நியமித்து, அதிபர் கோத்தபய ராஜபக்சே உத்தரவிட்டார். நேற்று, புதிய பிரதமராக, மகிந்த ராஜபக்சே பதவியேற்றுக்கொண்டார்.

இந்நிலையில் இலங்கையின் இடைக்கால அமைச்சரவை உறுப்பினர்கள் இன்று பதவியேற்று கொண்டனர். அதிபர் மாளிகையில் நடந்த விழாவில், அதிபரின் மற்றோரு சகோதரர் சமல் ராஜபக்சே, நிமல் ஸ்ரீபாலா, மகிந்த அமரவீரா உள்ளிட்ட பலர் அமைச்சர்களாக பதவியேற்று கொண்டனர். பிரதமர் மகிந்த ராஜபக்சேவிற்கு, நிதித்துறை, பொருளாதார விவகாரம், வீட்டுவசதி, நகர்ப்புற வளர்ச்சி, குடிநீர் சப்ளை மற்றம் புத்த மத விவகாரத்துறை ஒதுக்கப்பட்டுள்ளது. மற்றொரு சகோதரர் சமல் ராஜபக்சேவிற்கு, விவசாயம், நீர்பாசனம், உள்நாட்டு வர்த்தகம் மற்றும் நுகர்வோர் விவகாரத்துறை ஒதுக்கப்பட்டுள்ளது. இலங்கையின் ஒட்டு மொத்த அதிகாரமும் ராஜபக்சே குடும்பத்துக்கு சென்றுவிட்டதாக, இலங்கை அரசியல் வட்டாரங்கள் விமர்சித்து வருகின்றன.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
 • MEDHUVA PESUNGA

  Mon - Fri : 06:57

 • KELVIGAL AAYIRAM

  Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

 • MAKKALODU MAKKAL SELVAR

  Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

 • ACHUM ASALUM

  Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00