நெல்லையில் ரவுடி படுகொலை : பிரேத பரிசோதனை நிறைவு - உடலை வாங்க மறுக்கும் உறவினர்கள்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

முன்விரோதம் காரணமாக பிரபல ரவுடி தீபக் ராஜா கொலை செய்யப்பட்டதாக நெல்லை போலீசார் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

நெல்லை மாவட்டம் வாகைகுளத்தை சேர்ந்த தீபக் ராஜா, தன் காதலியுடன் பாளையங்கோட்டை அருகேயுள்ள பிரபல உணவகத்தில் உணவருந்த சென்றபோது மர்ம கும்பலால் படுகொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பாக பக்கவெட்டி கிராமத்தை சேர்ந்த வடிவேல் என்பவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் தீபக் ராஜா மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இதற்கு பழி தீர்க்கும் வகையில் வடிவேலின் கூட்டாளிகள் தீபக் ராஜாவை கொலை செய்திருக்க அதிக வாய்ப்புள்ளதாக போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. மேலும் இக்கொலை வழக்கு தொடர்பாக நெல்லை மாவட்டத்தை சேர்ந்த 6 நபர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். இது குறித்து விடுதலை சிறுத்தை கட்சி மாநில நிர்வாகி கார்த்திக் கூறும்போது, தென் மாவட்டங்களில் கூலிப்படைகளின் அட்டகாசம் அதிகரித்துள்ளதாகவும், இதனை தடுப்பதற்கு என்ன நடவடிக்கை மேற்கொள்வது என தெரியாமல் காவல்துறையினர் திகைப்பில் உள்ளதாகவும் கூறினார். இந்நிலையில் குற்றவாளிகளை கைது செய்யாமல் தீபக் ராஜாவின் உடலை வாங்கப்போவதில்லை என ரவுடியின் உறவினர்கள் தெரிவித்ததால் சிறிது நேரம் அங்கு பரபரப்பு நிலவியது.

Night
Day