ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர், 9 ஆண்டுகளாக பாதாள அறையில் அடைத்து வைக்கப்பட்ட கொடுமை - நெதர்லாந்தில் நடந்த அதிர்ச்சி சம்பவம்

Oct 17 2019 12:55PM
எழுத்தின் அளவு: அ + அ -
நெதர்லாந்தில் 9 ஆண்டுகளாக பாதாள அறையில் அடைத்து வைக்கப்பட்டிருந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேரை மீட்ட காவல்துறையினர் அவர்களை மருத்துவமனையில் அனுமதித்தனர்.

நெதர்லாந்து நாட்டின் வடக்கு பகுதியில் டிரென்தி மாகாணத்தில் உள்ள மதுபான விடுதிக்கு 25 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவர் சென்றுள்ளார். காட்டுவாசி போல இருந்த அவர் மதுபான விடுதியில் இருந்தவர்களிடம், தான் கடந்த 9 ஆண்டுகளாக வெளியுலகத்தை பார்க்கவில்லை என்றும் பண்ணை வீட்டின் பாதாள அறையில் அடைக்கப்பட்டு இருந்ததாகவும் கூறி உதவி கேட்டார். இதை கேட்டு அதிர்ச்சியடைந்த அவர்கள் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். அதன் பேரில் விரைந்து வந்த காவல்துறையினர், வயல் வெளி மத்தியில் அமைந்திருந்த பண்ணை வீட்டில் நுழைந்து மற்றவர்களையும் மீட்டனர். இவர்கள் 9 ஆண்டுகளாக வயலில் விளையும் காய்கரிகளையும் ஆட்டிறைச்சியை மட்டுமே சாப்பிட்டு உயிர் வாழ்ந்து வந்துள்ளனர். இதையடுத்து 7 பேரையும் போலீசார் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக 58 வயதான நபர் ஒருவரை கைது செய்துள்ள போலீசார், 7 பேரும் பாதாள அறையில் அடைத்து வைக்கப்பட்டதற்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3663.00 RS. 3826.00
மும்பை Rs. 3716.00 Rs. 3816.00
டெல்லி Rs. 3711.00 Rs. 3831.00
கொல்கத்தா Rs. 3750.00 Rs. 3890.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 48.40 Rs. 48400.00
மும்பை Rs. 48.40 Rs. 48400.00
டெல்லி Rs. 48.40 Rs. 48400.00
கொல்கத்தா Rs. 48.40 Rs. 48400.00