2020-ம் ஆண்டு பிப்ரவரி வரை கிரே பட்டியலில் பாகிஸ்தான் : பயங்கரவாதிகளை ஒடுக்க நடவடிக்கை எடுக்காவிட்டால் கருப்புப் பட்டியலில் சேர்க்கப்படும் என சர்வதேச நிதிசார் நடவடிக்கை குழு எச்சரிக்கை

Oct 16 2019 9:46PM
எழுத்தின் அளவு: அ + அ -
2020-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் வரை பாகிஸ்தானை கிரே பட்டியலில் வைத்திருக்க, Financial Action Task Force எனப்படும் சர்வதேச நிதிசார் நடவடிக்கை குழு முடிவு செய்துள்ளது.

சர்வதேச அளவில் கருப்புப் பணம், தீவிரவாத அமைப்புகளுக்கு நிதி வழங்குவது உள்ளிட்ட நடவடிக்கைகளை ஜி -7 நாடுகளால் உருவாக்கப்பட்ட சர்வதேச நிதி சார் நடவடிக்கை குழு கண்காணித்து வருகிறது. இந்த குழு கடந்த ஆண்டு ஜூன் மாதம், தீவிரவாத அமைப்புகளுக்கு நிதி வழங்கிய புகாரில், பாகிஸ்தானை கிரே பட்டியலில் சேர்த்தது. மேலும், பாகிஸ்தானுக்கு சில நிபந்தனைகளை விதித்து, அவற்றை ஓராண்டுக்குள் செயல்படுத்த அறிவுறுத்தியது.

இந்த நிலையில், சர்வதேச நிதிசார் நடவடிக்கை குழுவின் ஆலோசனைக் கூட்டம் பாரிசில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட பாகிஸ்தான், கடந்த ஓராண்டில் கருப்புப் பணம், தீவிரவாத அமைப்புகளுக்கு நிதி வழங்குதல் உள்ளிட்ட முறைகேடுகள் நடக்காமல் கண்காணித்து வந்ததாக, அறிக்கை அளித்தது. ஆனால் பாகிஸ்தானின் அறிக்கையை ஏற்றுகொள்ள மறுத்த சர்வதேச நிதி சார் நடவடிக்கை குழு வரும் 2020-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் வரை பாகிஸ்தானை கிரே பட்டியலில் வைக்க முடிவு செய்தது. அப்போதும் பயங்கரவத்தை கட்டுபடுத்த நடவடிக்கை எடுக்காவிட்டால் பாகிஸ்தான் கருப்புப் பட்டியலில் சேர்க்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3663.00 RS. 3826.00
மும்பை Rs. 3716.00 Rs. 3816.00
டெல்லி Rs. 3711.00 Rs. 3831.00
கொல்கத்தா Rs. 3750.00 Rs. 3890.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 48.40 Rs. 48400.00
மும்பை Rs. 48.40 Rs. 48400.00
டெல்லி Rs. 48.40 Rs. 48400.00
கொல்கத்தா Rs. 48.40 Rs. 48400.00