பருவநிலை மாற்றத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் : உலக நாடுகளின் தலைவர்களை வலியுறுத்தி போராட்டம்

Sep 21 2019 11:55AM
எழுத்தின் அளவு: அ + அ -
பருவநிலை மாற்றத்தின் மீது உலகத் தலைவர்கள் உடனடியாக நடவடிக்கை எடுக்கக்கோரி, ஸ்வீடன் மாணவி கிரேட்டா என்பவர் முன்னெடுத்த போராட்டத்தில், 150-க்கும் மேற்பட்ட நாடுகளை சேர்ந்த மாணவ மாணவிகள் கலந்து கொண்டு போராடினர்.

ஸ்வீடன் நாட்டை சேர்ந்தவர் கிரேட்டா தன்பெர்க், 16 வயதான இவர், உலக வெப்பமயமாதலால் எதிர்காலம் அபாயத்துக்குள்ளாவதை எண்ணி, வெள்ளிக்கிழமை தோறும், பள்ளியை புறக்கணித்து, ஸ்வீடன் நாடாளுமன்றம் முன்பு, தனி ஆளாக போராட துவங்கினார். அடுத்த சில வாரங்களில், பல பள்ளி மாணவர்களும் அவருடன் போராட்டத்தில் இணைந்தனர். பின், தனது பள்ளிப்படிப்பை பாதியிலேயே நிறுத்திய இவர், முழுநேரமாக களத்தில் இறங்கினார். இவரது செயல்பாடு கவனம் பெற, சமூக வலைதளங்களில் பரவியது. இந்நிலையில், செப் 20 முதல் 27 வரை, உலகம் முழுவதிலும் உள்ள மாணவர்கள் எதிர்காலத்துக்காக போராட வேண்டும் என கிரேட்டா அழைப்பு விடுத்தார். அவரது அழைப்பை ஏற்று, அமெரிக்கா, இந்தியா, ஆஸ்திரேலியா, கனடா, தென்கொரியா, சிலி, ஹங்கேரி உள்ளிட்ட 150-க்கும் மேலான நாடுகளை சேர்ந்த மாணவர்கள், பருவநிலை மாற்றத்தைத் தடுக்க அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
 • MEDHUVA PESUNGA

  Mon - Fri : 06:57

 • KELVIGAL AAYIRAM

  Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

 • MAKKALODU MAKKAL SELVAR

  Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

 • ACHUM ASALUM

  Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00