தீவிரவாத கறுப்புப் பட்டியலில் பாகிஸ்தான் சேர்ப்பு - தீவிரவாத இயக்‍கங்களுக்‍கு நிதி வழங்கப்படுவதை தடுக்காததால் சர்வதேச நிதி கண்காணிப்பு அமைப்பு நடவடிக்‍கை

Aug 23 2019 8:23PM
எழுத்தின் அளவு: அ + அ -
தீவிரவாத இயக்‍கங்களுக்‍கு நிதி வழங்கப்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்காததால், சர்வதேச நிதி கண்காணிப்பு அமைப்பான FATF, பாகிஸ்தானை தீவிரவாத கறுப்பு பட்டியலில் சேர்த்துள்ளது.

தீவிரவாத இயக்‍கங்களுக்‍கு நிதி வழங்கப்படுவது, சட்டவிரோத பணபரிவர்த்தனை ஆகியவற்றை தடுப்பதற்காக ஆசிய - பசிபிக் குழுமம் 40 விதிகளை நிர்ணயித்துள்ளது. இதில், 32 விதிகளை பாகிஸ்தான் கடைபிடிக்கவில்லை என்று குற்றச்சாட்டு எழுந்ததையடுத்து, நடவடிக்‍கை எடுக்‍குமாறு அந்நாட்டுக்‍கு எச்சரிக்‍கை விடுக்‍கப்பட்டது. இருந்தபோதிலும், தீவிரவாத இயக்‍கங்களுக்‍கு நிதி வழங்கப்படுவதை தடுக்க பாகிஸ்தான் நடவடிக்‍கை எடுக்காததால், அந்நாடு தீவிரவாத கருப்பு பட்டியலில் சேர்க்‍கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக ஆஸ்திரேலியாவின் கான்பெராவில் நடைபெற்ற சர்வதேச நிதி கண்காணிப்பு அமைப்பின் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

தொடர்ந்து கறுப்பு பட்டியலில் இருப்பதை தவிர்க்‍க, வரும் அக்டோபர் மாதத்திற்குள், பாகிஸ்தான், தீவிரவாத அமைப்புகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கையை எடுத்தே ஆக வேண்டிய நிலைக்‍கு தள்ளப்பட்டுள்ளது. அப்படி தவறும் பட்சத்தில் சர்வதேச அமைப்புகளிடம் இருந்து, பாகிஸ்தான், நிதி பெற முடியாத நிலை ஏற்படும்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3611.00 Rs. 3768.00
மும்பை Rs. 3289.00 Rs. 3483.00
டெல்லி Rs. 3303.00 Rs. 3498.00
கொல்கத்தா Rs. 3303.00 Rs. 3495.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.50 Rs. 50500.00
மும்பை Rs. 50.50 Rs. 50500.00
டெல்லி Rs. 50.50 Rs. 50500.00
கொல்கத்தா Rs. 50.50 Rs. 50500.00