கனடா சென்றார் ஜெலன்ஸ்கி-ஜஸ்டின் ட்ரூடோவுடன் சந்திப்பு : இரு நாடுகளுக்கும் இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தானது
Sep 23 2023 11:37AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
அமெரிக்க பயணத்தை முடித்துக் கொண்டு கனடா சென்ற உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, அந்நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவைச் சந்தித்துப் பேசினார். அப்போது இரு நாடுகளுக்கும் இடையே ஒரு தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தானது. தொடர்ந்து இருவரும் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது கனடாவின் பொருளாதாரத் தடைகள் பட்டியலில் மேலும் 63 ரஷ்ய தனி நபர்கள் மற்றும் நிறுவனங்கள் சேர்க்கப்படும் என்றும் மத்திய ரஷ்ய வங்கியிலிருந்து சொத்துக்களைக் கைப்பற்ற G7 நாடுகளில் முயற்சிகள் நடந்து வருவதாக ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்தார். உக்ரைனுக்கு மேலும் புதிய ஆயுத உதவிகள் வழங்கப்படும் என்றார். ரஷ்யாவுடனான போரில் கனடா செய்து வரும் உதவிக்கு நன்றி தெரிவிக்கவே நேரில் வந்ததாக ஜெலன்ஸ்கி குறிப்பிட்டார்.