அமெரிக்காவில் வெடித்து சிதறத் தொடங்கிய கிளாயுவா எரிமலை : நெருப்பு குழம்பை கக்கி வரும் எரிமலை கிளாயுவா
Jun 8 2023 5:40PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
அமெரிக்காவின் ஹவாய் தீவிலுள்ள கிளாயுவா எரிமலை சுமார் 200 அடி உயரத்தில் வெடித்து சிதறத் தொடங்கியுள்ளது. கடந்த 2019ம் ஆண்டு கிளாயுவா எரிமலை வெடித்தபோது, ஏராளமான வீடுகள் சேதமடைந்தன. அதனை தொடர்ந்து, கடந்த ஜனவரி மாதம் எரிமலை வெடித்து சிதறியது. அதன்பிறகு சீற்றம் தணிந்து காணப்பட்ட நிலையில், தற்போது எரிமலை மீண்டும் சுமார் 200 அடி உயரத்திற்கு வெடித்து சிதற தொடங்கியுள்ளது. உலகில் எந்நேரமும் சீற்றத்துடன் காணப்படும் எரிமலைகளில் ஒன்றான கிளாயுவா எரிமலை தீப்பிழம்பாக சிவப்பு நிறத்தில் காட்சியளிக்கிறது.