அமெரிக்காவின் கலிபோர்னியாவில் வீடுகளின் முன் வரிசையாக நிறுத்தப்பட்டுள்ள சிறிய ரக விமானங்கள்
Jun 8 2023 4:53PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
அமெரிக்காவின் கலிபோர்னியாவில் அனைவரது வீட்டின் முன் காருக்கு பதில் விமானங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள காட்சி வெளியாகியுள்ளது. கேமரூன் ஏர்பார்க் என்னும் பகுதியில் வசிக்கும் ஒவ்வொரு வீட்டிலும் சொந்தமாக விமானம் வைத்துள்ளனர். இந்த நகரில் வசிக்கும் மக்கள் தங்கள் விமானத்தை அலுவலகத்திற்கும் பிற வேலைகளுக்கும் எடுத்துச் செல்கின்றனர். வீட்டின் முன் விமானத்தை நிறுத்துவதற்கு ஏதுவாக 100 அடி சாலை போடப்பட்டுள்ளது. இந்த நகரத்தில் விமானிகள், மருத்துவர்கள், வழக்கறிஞர்கள் என அனைவரும் விமானம் வைத்துள்ளனர்.