ஆப்கானிஸ்தானில் மினி பேருந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்து : 9 குழந்தைகள் உள்பட 25 பேர் உயிரிழந்த சோகம்
Jun 8 2023 10:02AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஆப்கானிஸ்தானில் மினி பேருந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்த விபத்தில் 9 குழந்தைகள் உள்பட 25 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சயாத் மாவட்டத்தைச் சேர்ந்த சிலர் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக மினி பேருந்தில் சென்று கொண்டிருந்தனர். சார்-இ-புல் மாகாண மலைப் பகுதியில் சென்ற போது பேருந்து திடீரென பள்ளத்தாக்கில் கவிழ்ந்தது. இதில் 12 பெண்கள் 9 குழந்தைகள் உள்பட 25 பேர் பலியாகினர். மினி பேருந்து ஓட்டுநரின் கவனக்குறைவே விபத்துக்கு காரணம் என போலீசார் கூறியுள்ளனர்.