தாய்லாந்தில் உள்ள தேசிய பூங்காவில் பற்றி எரியும் தீ மலை முழுவதும் பரவியது : தீயைக் கட்டுப்படுத்த முடியாமல் தவிக்கும் தீ அணைப்பு வீரர்கள்
Mar 30 2023 6:07PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தாய்லாந்து நாட்டில் உள்ள மலைப்பகுதி ஒன்றில் பற்றிய தீயை அணைக்கும் பணி தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பாங்காக் நகரில் இருந்து சுமார் இரண்டு மணிநேரப் பயண தொலைவில் அமைந்துள்ள காவோ லேம் தேசிய பூங்கா சுமார் ஆயிரத்து ஐநூறு சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் விரிந்து கிடக்கிறது. இப்பகுதியில் உள்ள ஒரு மலைப்பகுதியில் மின்னல் தாக்கியதால் பற்றிய தீ, வேகமாகப் பரவி ஒரு மலைமுழுவதும் எரிந்து வருகிறது. இத்தீயைக் கட்டுப்படுத்த ஏராளமான தீ அணைப்பு வீரர்கள் பணியில் ஈடுபட்டுள்ளனர். இருப்பினும் கட்டுக்கடங்காமல் எரியும் தீயை அணைப்பது சவால்கள் நிறைந்த பணியாக உள்ள நிலையில், தீ மேலும் பல பகுதிகளுக்குப் பரவாமல் தடுக்கும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.