இந்திய ரொட்டியை தயாரிக்கும் பில்கேட்ஸ் : இணையத்தில் வைரலாகும் பில்கேட்ஸின் சமையல் வீடியோ
Feb 4 2023 2:21PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
உலக முன்னணி பணக்காரர்களில் ஒருவரும், மைக்ரோசாஃப்ட் நிறுவனருமான பில் கேட்ஸ், இந்திய ரொட்டி தயாரிப்பது குறித்த வீடியோ ஒன்றை ட்விட்டரில் வெளியிட, அது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. வீடியோவில், பில்கேட்சுக்கு இந்திய ரொட்டியை தயாரிப்பது குறித்து, அமெரிக்காவின் பிரபல சமையல் கலை வல்லுனரான எய்டன் பெர்நாத் கற்றுக்கொடுக்கும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. எய்டன் பெர்நாத், அண்மையில் பீகாருக்கு வந்திருந்த போது, ரொட்டி தயாரிப்பது குறித்து கற்றுக் கொண்டிருக்கிறார். அது குறித்த தகவலை பில்கேட்சிடம் அவர் பகிர்ந்து கொள்வதும் வீடியோவில் இடம்பெற்றுள்ளது.