அமெரிக்காவில் 6 வயது மகனின் ஆன்லைன் அட்டகாசத்தால் அதிர்ச்சி அடைந்த தந்தை - தொடர்ந்து வீட்டுக்கு டெலிவரியாகிக் கொண்டிருந்த உணவுகள்
Feb 4 2023 2:15PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
அமெரிக்காவின் டெட்ராய்ட் பகுதியில் உள்ள செஸ்டர்பீல்ட் என்ற இடத்தில், தந்தையின், மொபைல் ஃபோனை பயன்படுத்தி, தொடர்ச்சியாக உணவு ஆர்டர் செய்த 6 வயது சிறுவனின் செயலால், வீடு முழுவதும் உணவுப் பொருட்கள் குவிய, குடும்பத்தினர் திகைத்துப் போயினர். மேசன் என்ற சிறுவன், தனது தந்தையின் மொபைல் ஃபோனில் கேம் விளையாடிக் கொண்டிருந்த நிலையில், அவனது வீட்டிற்கு சான்ட்விச், பீட்ஸா, ஷவர்மா, பர்கர் என உணவுகள் வரிசையாக டெலிவரியாகிக் கொண்டிருந்தன. இதனைப் பார்த்த மேசனின் தந்தை ஒன்றும் புரியாமல், அவன் கையிலிருந்த மொபைலை பிடுங்கி பார்த்தார். அப்போதுதான், மகன் மேசன் உணவு ஆர்டர் செய்ததை தந்தை கண்டறிந்தார். அதற்குள் வீடு முழுவதும் ஆர்டர் செய்த உணவுகள் நிரம்பின. இதனால், அக்கம்பக்கத்து வீட்டாரை அழைத்து உணவுகளை மேசனின் குடும்பத்தினர் வழங்கினர். இதனிடையே ஒரே கணக்கில் இருந்து இவ்வளவு ஆர்டர் வந்ததை பார்த்த கிரப்ஹப் என்ற உணவு நிறுவனம், 80 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான பரிசுக் கூப்பன்களை அளித்தது. மேலும் மேசனையும், அவரது பெற்றோரையும் தங்கள் நிறுவனத்தின் ஆன்லைன் விளம்பரத்துக்கு பயன்படுத்தவும் ஒப்பந்தம் செய்துள்ளது.