பிரான்ஸ் நாட்டில் 800 ஆண்டுகள் பழமையான நாட்ரிடாம் தேவாலயம் கடந்த 2019ல் எரிந்து சேதமான விவகாரம் : புதுப்பொழிவு பெற்று மீண்டும் 2024-ல் மக்கள் பார்வைக்காக திறக்க முடிவு
Feb 4 2023 1:35PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
பிரான்ஸ் நாட்டில் 800 ஆண்டுகள் பழமையான நாட்ரிடாம் தேவாலய புனரமைப்பு பணிகள் நிறைவடைந்து 2024-ல் மீண்டும் திறக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரீஸ் நகரில் உள்ள ஈபிள் கோபுரத்தின் அழகை ரசிக்கும் சுற்றுலா பயணிகள், பாரீசின் மத்திய பகுதியில் உள்ள புகழ்பெற்ற நாட்ரி டாம் தேவாலயத்திற்கு செல்வது வழக்கம். சுற்றுலா பயணிகளை ஈர்த்து வந்த வரலாற்று சிறப்புமிக்க இந்த தேவாலயம் 800 ஆண்டுகள் பழமையானது. பாரீஸ் நகரின் அடையாள சின்னமாக விளங்கும் இந்த தேவாலயத்தின் மேற்கூரையில் கடந்த 2019-ல் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் தேவாலயம் உருக்குலைந்து போனது. இந்நிலையில் இந்த தேவாலயத்தை புனரமைக்கும் பணிகள் தொடங்கி உள்ளன. தற்போது பணிகள் நிறைவடைந்த நிலையில் 2024-ல் மீண்டும் பொதுமக்கள் பார்வைக்கு திறக்க முடிவு செய்துள்ளதாக பிரான்ஸ் கலாச்சார அமைச்சகம் தெரிவித்துள்ளது.