அமெரிக்கா மற்றும் கனடா நாடுகளில் வரலாற்றிலேயே இல்லாத உறைய வைக்கும் குளிரில் சிக்கி மக்கள் தவிப்பு
Feb 4 2023 1:29PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
வரலாற்றிலேயே இல்லாத, உறைய வைக்கும் குளிர் காரணமாக அமெரிக்கா மற்றும் கனடா நாடுகளில் பத்து கோடிக்கும் அதிகமான பொதுமக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். பருவநிலை மாற்றம் காரணமாக உலகம் முழுவதும் பல்வேறு இயற்கைச் சீற்றங்கள் தாக்கி வரும் நிலையில், இந்த ஆண்டில் வழக்கத்துக்கு மாறாக உலகின் பலநாடுகளில் கடும் குளிர் நிலவுகிறது. இந்நிலையில், அமெரிக்கா மற்றும் கனடா நாடுகளில் முன்னெப்போதும் இல்லாத பனிப்புயல்கள் தாக்கி வருகின்றன. தற்போது வரலாற்றிலேயே இல்லாத குளிர் இப்பகுதிகளில் நிலவுகிறது. பகல் நேரங்களில் மைனஸ் 18 டிகிரி குளிரும், இரவில் மைனஸ் 45 டிகிரி பனிக்காற்றும் வீசுவதால் மக்கள் மிக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் காரணமாக அடுத்த 2 நாட்களுக்கு பொதுமக்கள் முடிந்தவரை வீடுகளை விட்டு வெளியேற வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளனர்.