அமெரிக்க முன்னாள் அதிபர் கிளிண்டனுக்கு கொரோனா தொற்று உறுதி : வீட்டிலேயே தனிமைப்படுத்திக்கொண்டு நலமாக இருப்பதாக தகவல்
Dec 2 2022 10:06AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால்
அமெரிக்காவின் முன்னாள் அதிபர் பில் கிளி
ண்டன் வீட்டிலேயே தம்மை தனிமைப்படுத்திக்கொண்டுள்ளார்.
பில் கிளிண்டன் கடந்த சில நாட்களாக லேசான காய்ச்சலால் அவதிப்பட்டு வந்தார். இதனை தொடர்ந்து கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்திக் கொண்டார். அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால், தன்னை வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டார். தொற்று பாதித்த போதும், தான் நலமாக இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் கொரோனா கட்டுப்படுத்தப்பட்டதாக கூறப்பட்டாலும், அதன் தீவிரம் குறையவில்லை என்று கருதப்படுகிறது.