சீன மக்களின் போராட்டத்துக்கு பணிந்து கட்டுப்பாடுகளை தளர்த்தியது சீன அரசு : மக்கள் தங்கள் வீடுகளிலேயே தனிமைப்படுத்திக் கொள்ள அனுமதி
Dec 2 2022 9:58AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சீன மக்களின் தன்னெழுச்சி போராட்டத்துக்கு பணிந்த அந்நாட்டு அரசு கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகளை பெருமளவில் தளர்த்தியுள்ளது. கடந்த இரண்டரை ஆண்டுகளுக்கு மேலாக கொரோனா பரவலால் சீன அரசு கடும் கட்டுப்பாடுகளை விதித்தது. தொடரும் கட்டுப்பாடுகளை எதிர்த்து மக்கள் நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் எதிரொலியாக 7 மாவட்டங்களில் தற்காலிக ஊரடங்கு கட்டுப்பாடுகள் நீக்கப்படுவதாக சீன அரசு அறிவித்தது. இதனால், கிழக்கு பீஜிங் நகரில், லேசான அறிகுறிகள் ஏற்பட்ட ஆயிரக்கணக்கான மக்கள் தனிமைப்படுத்தும் மையங்களுக்கு பதிலாக, வீட்டிலேயே தங்கி தனிமைப்படுத்திக்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதனை பெரும்பாலான மக்கள் வரவேற்று உள்ளனர். மக்கள், பரிசோதனைகள், சிகிச்சை மற்றும் தனிமைப்படுத்தும் கொள்கைகளுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டுமென அரசு வலியுறுத்தி உள்ளது.