பிரேசிலில் பலத்த மழை, நிலச்சரிவு பாதிப்பு - 2 பேர் உயிரிழந்ததாக அரசு அறிவிப்பு
Dec 2 2022 9:56AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
பிரேசில் நாட்டில் பெய்த பலத்த மழை பாதிப்பில் சிக்கி இரண்டு பேர் உயிரிழந்த நிலையில், நிலச்சரிவில் சிக்கிய நபர்களை மீட்கும் பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பிரேசில் நாட்டின் தென்பகுதியில் உள்ள SANTA CATARINA மாநிலத்தில் உள்ள மலைப்பகுதியில் கடந்த இரு தினங்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் பல கிராமங்கள் வெள்ளத்தில் சிக்கித் தவிக்கின்றன. இந்நிலையில் சில இடங்களில் நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை அந்நாட்டு அரசு முடுக்கிவிட்டுள்ளது.